2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

முட்டை உற்பத்தியாளர்கள் இன்று முக்கிய சந்திப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் இன்றைய தினம் (22)  கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளை முட்டை ஒன்றுக்கு 43 ரூபா எனவும் சிவப்பு முட்டை ஒன்றுக்கு 45 ரூபா எனவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்து நுகர்வோர் அதிகார சபையினால் அண்மையில் வர்த்தமானி வெளியிடப்பட்டது. 

எனினும்,  குறித்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டு, செலவுகளை ஈடு செய்யக் கூடிய வகையில் விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது . (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .