Editorial / 2021 ஏப்ரல் 29 , மு.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளை வான்களில் நபர்களை கடத்திக்கொண்டு சென்று, முதலைகள் வாழும் கங்கைகளில் போடப்பட்டனர் என்றக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வருகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியே மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இருவர் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கே, ஜூலை 7ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது. அதற்கான அனுமதியை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த, நேற்று (29) வழங்கினார்.
போலியான தாடிகளை வைத்திருந்த இரண்டு நபர்களைப் பயன்படுத்தி, ஊடகவியலாளர் சந்திப்பில் போலியான தகவல்களை வெளியிப்படுத்தினர் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, பிரதிவாதிகளான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
2019 ஒக்டோபர் 10ஆம் திகதி, 2019 நவம்பர் 11ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில், கொழும்பு- திம்பிரிகஸ்யாய பிரதேசத்திலேயே அந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
வெள்ளை வான்களில் நபர்களை கடத்திச் சென்று முதலைகள் நிறைந்திருந்த கங்கைக்குள் தள்ளிவிடப்பட்டனர் என, போலியான தாடியை வைத்துக்கொண்டிருந்த டக்ளஸ் பெர்னாந்து என்ற பெயரில் முன்னிலையாகியிருந்த சரத்குமார அந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அத்துடன் அவருக்கு ஆதரவாக போலியான தாடியை வைத்திருந்த உண்டியல் அதுல என்ற பெயரில் இருந்த சஞ்ஜீவ மதநாயக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடமிருந்து இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட ஒருதொகை தங்கம், கோட்டாபய ராஜபக்ஷ, வைத்துக்கொண்டார் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மூவருக்கு எதிராகவும் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கே, நேற்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .