2026 மார்ச் 16, திங்கட்கிழமை

முனக்கரே குளத்தில் இருந்து இருவரும் சடலங்களாக மீட்பு

Editorial   / 2024 நவம்பர் 25 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு குளத்தில் சிறிய மீன்பிடி படகு கவிழ்ந்ததில் காணாமல் போன தந்தை மற்றும் மகளின் சடலங்கள் நீர்கொழும்பு முனக்கரே சிறிவர்தன்புர குளத்தில் திங்கட்கிழமை (25)  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடி படகு துரதிஷ்டவசமாக கவிழ்ந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரணில் பெர்னாண்டோ (வயது 50)    அவரது மூத்த மகளான 18 வயதான நிலுஷா நெத்மி பெர்னாண்டோவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த அருட்தந்தை,  உறவினர்கள் ஏழுபேருடன் தந்தையும் மகளும் இறால் படகு என அழைக்கப்படும் சிறிய மீன்பிடி படகில் பயணித்துள்ளனர்.

எனினும், படகு கவிழ்ந்ததைக் கண்ட அருகிலிருந்தவர்கள் இந்த சிறிய படகில் பயணித்த கத்தோலிக்க தந்தை மற்றும் நால்வரை விரைவாக காப்பாற்றிய போதிலும், நீரோட்டம் அதிகரித்ததால் தந்தையையும் மகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் இருவரும், திங்கட்கிழமை (25) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X