2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முன்பள்ளிகள் தொடர்பான முடிவு இரண்டு வாரங்களுக்குள்

J.A. George   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்பள்ளிகள் மற்றும் ஆரம்ப பிரிவு கல்வி நடவடிக்கையை ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானம் இன்னும் இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்படும் என கல்வியமைச்சர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களின் வருகை தற்போது நூற்றுக்கு 51 சதவீதமான அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில்,சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி முன்பள்ளிகள்  மற்றும் தரம் 01 முதல் 05ஆம் வகுப்பு வரையான கல்விநடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் இந்தமாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X