Freelancer / 2023 செப்டெம்பர் 15 , மு.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனமழை காரணமாக, மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஒரு சிறிய ரக விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி பாதியாக உடைந்து விபத்துக்குள்ளானது.
அதில், பயணம் செய்த எட்டு பேரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று மாலை 5 மணிக்கு நடந்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தில் உள்ள இரண்டு ஓடுபாதைகளும் சிறிது நேரம் மூடப்பட்டன.
அதில் ஒரு ஓடுபாதை மட்டும் மாலை 6.45 மணியளவில் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இதன் காரணமாக, மும்பை விமான நிலையத்துக்கு வந்த 9 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்ததும், இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியது. எனினும், மீட்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்துள்ளனர். R
15 minute ago
53 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
53 minute ago
7 hours ago