2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் ஒருவர் சுட்டுக்கொலை; இருவர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 06 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்துக்கு உட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் கிளிநொச்சியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்

இன்று (06) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

48 வயதுடைய  பாலராசா ஜெதீஸ்வரன் என்ற  குறித்த நபர் தனது வயலினை அறுவடை செய்வதற்காக சென்றுள்ள நிலையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாங்குளம் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையினை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகத்தின்பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .