Editorial / 2021 ஜனவரி 10 , பி.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராகச் செயற்படும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை, வன்மையாகக் கண்டித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான ரிஷாட் பதியூதீன், வடக்கு கிழக்கில் இன்று (11) முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு, முஸ்லிம்கள் பூரண ஒத்துழைப்பை நல்கவேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை, இடித்துத் தரைமட்டமாக்கியதை எதிர்த்தும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு இந்த அரசாங்கத்தால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும் இன்று (11) ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கான அழைப்பை தமிழ்க் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் விடுத்துள்ளன.
‘ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகங்களாக இலங்கைச் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுள்ளனர். ஆகக் குறைந்தது, உயிரிழந்தோரை நினைவுகூரவும், நல்லடக்கம் செய்யவும் சிறுபான்மைச் சமூகங்கள் மறுக்கப்படுகின்றன. இவற்றுக்குப் பின்னால், ஆளும் வர்க்கத்தின் அதிகாரக் கெடுபிடிகள் இல்லாமலிருக்காது.
இவ்வாறான செயற்பாடுகளை, ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதற்கு, சிறுபான்மையினர் ஒன்றுபட வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, தமிழ்த் தலைமைகள் குரல் கொடுத்து வருவதை நாம் மறக்க முடியாது. எமக்குள் உள்ள சிறிய சிறிய பேதங்களை மறந்து, ஒன்றுபடுமளவுக்குப் பேரினவாதம், சிறுபான்மையினரை அடக்கி, ஒடுக்குவதாகவே நாம் கருதுகிறோம் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், எனவே, வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் பூரணமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நமது நாட்டில், இந்த அரசாங்கத்தால் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் என்ற உணர்விலும் முஸ்லிம்கள் இந்தக் ஹர்த்தாலை ஆதரிப்பது அவசியம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago