Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் அமைச்சு பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தினம் பதவியேற்க முடியாமல் போகுமிடத்து நாளைய தினம் அமைச்சரவை கூட்டத்துக்கு முன்னர் அவர்கள் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவை, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சு பதவிகளில் இருந்து 9 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்தனர்.
அவர்களில் கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ.ஹலிம் ஆகிய இருவரும் பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டிருந்தனர்.
7 பேர் தமது பதவிகளை பொறுப்பேற்க வேண்டியுள்ள நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் தனது ராஜங்க அமைச்சு பதவியை பொறுப்பேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
32 minute ago
52 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
52 minute ago
59 minute ago
3 hours ago