Editorial / 2024 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினரும் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என். முபீன் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்த செய்யப்பட்டுள்ளார் என்று கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.
அத்துடன் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான விளக்கம் கோரும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை மீறி ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பகிரங்கமாக ஆதரிப்பதால், தலைவர் ரவூப் ஹக்கீமின் அறிவுறுத்தலின் பேரில் கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள முபீன் ஒரு வார காலத்துக்குள் தன்னுடைய விளக்கத்தை கட்சிக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் சம்பந்தமாக கடைசி முடிவு கட்சியின் உயர் பீட கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் நிஸாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.
அஸ்லம் எஸ்.மெளலானா
13 minute ago
35 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
35 minute ago
51 minute ago