2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

மேலும் இரண்டு வினாத்தாள்கள் வௌியாகியுள்ளன

Freelancer   / 2025 ஜனவரி 06 , பி.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளின் 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான மேலும் இரண்டு வினாத்தாள்கள் வெளியாகியுள்ளன.

விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்கள் தொடர்பான வினாத்தாள்கள் இவ்வாறு வௌியாகியுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர்  சிறிமெவன் தர்மசேன தெரிவித்தார்.

“இன்றைய பரீட்சை வினாத்தாள் வெளியானதாக நேற்று நள்ளிரவு முதலாவது செய்தி கிடைத்தது. அதன்படி இன்று காலை அந்த பரீட்சை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்தோம். இன்று பிற்பகலில், நாளை மற்றும் நாளை மறுநாள் திட்டமிடப்பட்ட விஞ்ஞானம் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் வௌியானதாக தகவல் கிடைத்தது."

இந்த வினாத்தாள்கள் வெளியானது தொடர்பாக அநுராதபுரம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .