Editorial / 2020 ஏப்ரல் 21 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலும் 5 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 309 வரை அதிகரித்துள்ளது.
கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று (20) காலையில் 24 நோயாளர்களும், பிற்பகலில் 8 தொற்றாளர்களும் மாலையில் ஒரு தொற்றாளரும் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான 98 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அத்துடன், இலங்கையில் 7 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago