Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Freelancer / 2025 மே 12 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் நரேந்திர மோடி, புதுடில்லியில் உள்ள தனது இல்லத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அணில் சவுகான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இருதரப்பு மோதலை நிறுத்திக்கொள்வது என இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மோதலை முடிவுக்குக் கொண்டு வர உதவியதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பாகிஸ்தான் ஆயுதப் படைகள் ட்ரோன் தாக்குதலை நடத்தின. இதனால், மீண்டும் ஒரு பதற்றச் சூழல் உருவானது.
எனினும், நேற்று காலை முதல் எல்லையோர பகுதிகளில் அமைதி நிலவுகிறது. இதையடுத்து, இராணுவ மோதல் காரணமாக அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் திரும்பப் பெற்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அணில் சவுகான், முப்படை தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago