Freelancer / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு கொம்புச்சந்தி பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை, இன்று (14) மாலை மீட்டுள்ள சம்மாந்துறை பொலிஸார், சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 9 எம்.எம் கைத்துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
காரைதீவு கொம்புச்சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் பொலிஸ் குழுவினர் தேடுதலை மேற்கொண்டு இந்த கைத்துப்பாக்கி மற்றும் மகசின்களை மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டினுள் குறித்த துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் 44 வயது மதிக்க தக்க மகாலிங்கசிவம் அசோக் என்ற சந்தேக கைதாகியுள்ளதுடன் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசின்கள் சம்மாந்துறை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கைதாகிய சந்தேக நபர் சிறிது காலம் தாதிய உத்தியோகத்தராகவும் விடுதலைப் புலிகளுடனும் கடந்த காலங்களில் நெருங்கி செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago