Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 07 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்தாபித்திருக்கும் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் பேரணி ஒன்று நேற்றுமுன்தினம்(05) நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு முன்பாக நடைபெற்றது.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துக்கொண்டு உரையாற்றியிருந்தனர்.
இந்நிகழ்வின் இறுதியில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசியக் கீதம் இசைக்கப்பட்டிருந்ததோடு, தேசியக் கீதம் இசைக்க தொடங்கியதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கை அசைப்பதைக் அவதானித்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேசிய கீதம் இசைக்கப்படுவதாக கூறியதன் பின்னர் ஜனாதிபதி சுதா கரித்துக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குண்டுத் துளைக்காத அங்கியை அணிந்திருந்ததாக குறிப்பிட்டு அவரின் புகைப்படம் ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதையும் அவதானிக்க முடிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
33 minute ago
59 minute ago