Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தை நேற்று (05) இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு 5 நாட்களே உள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
இந்த பேச்சுவார்த்தைக்கு முதல் நாள் தொலைபேசி ஊடாக பல தடவைகள் இருவரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், எதிர்க்கட்சித்தலைவர் தலைமையில் நாடாளுமன்றில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago