Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 நவம்பர் 03 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞர்கள், நீதிபதிகளை, ‘மை லார்ட்’ அல்லது ‘யுவர் லார்ட்ஷிப்’ என்று அழைப்பது, ஆங்கிலேயர் காலத்தில் இருந்து வழக்கத்தில் இருந்து வருகிறது. இது காலனியாதிக்க மனநிலை எனவும், அடிமைத்தனத்தின் அடையாளம் எனவும் கூறி, இதற்கு பதிலாக நீதிபதிகளை ’சார்’ என்று அழைத்தால் போதுமானது என கடந்த 2006-ம் ஆண்டு இந்திய பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனாலும், இது முழுமையாக இதுவரை பின்பற்றப்படுவதில்லை. இப்போதும், பல மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகளை ’மை லார்ட்’ என்று அழைப்பது தொடர்ந்து வருவதாக, பல தருணங்களில் நீதிபதிகளே சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றின் போது, நீதிபதிகள் போபன்னா மற்றும் நரசிம்ஹா ஆகியோர் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வழக்கில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் ஒருவர், பல முறை ’மை லார்ட்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி நரசிம்மா, ’மை லார்ட்’ என்று அழைப்பதை நிறுத்துமாறும், அவ்வாறு கூறுவதை நிறுத்தினால் தனது பாதி ஊதியத்தை தருவதாகவும் கூறினார். ’சார்’ என்று அழைத்தால் போதுமானது என தெரிவித்த அவர், மீண்டும் ’மை லார்ட்’ என்று கூறினால், அதன் எண்ணிக்கையை பதிவு செய்யப்போவதாகவும் அதிருப்தியுடன் தெரிவித்தார். இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago