Freelancer / 2021 நவம்பர் 10 , பி.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான பயணக்கட்டுப்பாடுகளை மக்களே தீர்மானிக்கின்றனர் என்று தெரிவித்த சுகாதார அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல, மோசமான நிலையை மக்கள் காட்டினால் மீண்டும் அவ்வாறானதொரு நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்று எச்சரித்தார்.
கொரோனாவுக்கு எதிராக அரசாங்கம் இவ்வளவு உயர்ந்த நடவடிக்கை எடுக்கும் போது மக்கள் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர்களின் பங்களிப்பின் அடிப்படையிலேயே கொரோனா நிர்வாகம் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்துக்கு அருகில் விக்கிரமராட்சி கண் மருத்துவ நிறுவனத்துடன் இணைந்த மத்திய நிலையத்தை இன்று (10) திறந்து வைத்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.
கொரோனா நிர்வாகத்துக்கு அதிக பங்களிப்பை மக்கள் வழங்கும் போது, இந்த துரதிஷ்டமான நிலைமையை நாட்டிலிருந்து துடைத்தெறிய முடியும் என்றும், உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், கொரோனா நிர்வாகத்தில் இலங்கை சிறந்த நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதுவரை வெற்றிகரமான தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், எனவே சுகாதார வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மக்கள் வாழும் சூழலை தயார் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நிலைமை குறித்து முழுமையான முடிவுகளை எடுக்க முடியாது என்றும் ஆனால் தொற்றுநோய் தொடர்பில் அவதானமாக இருப்பது நல்ல விடயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் வழங்கப்படும் தடுப்பூசிகள், சில நாடுகளின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே தடுப்பூசி போடப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
8 hours ago
8 hours ago
19 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
19 Jan 2026