Editorial / 2017 ஜூலை 07 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புத் துறைமுகம் தொடர்பில், சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்லவுடன் மோதுவதற்கு தான் விரும்பவில்லையென, முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று (06) நடத்தப்பட்டது.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான மஹிந்தானந்த அளுத்கமகே, “தற்போதைய அரசாங்கம், நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கிறது” என்று, கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவைதொடர்பிலான விவரங்களையும் முன்வைத்தார்.
அளுத்கமகே எம்.பியின் குற்றச்சாட்டுகளை மறுத்த, சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “உங்கள் அரசாங்கம்தான் எல்லாவற்றையும் விற்றது. சபையில் மஹிந்த ராஜபக்ஷவும் உள்ளார். இவர்தான், கொழும்புத் துறைமுக நகரை சீனாவுக்கு விற்றார்” என்று, குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “எமது ஆட்சி உருவாகுவதற்கு முன்னர் கொழும்புத் துறைமுகம் இருந்ததா? இதற்கு என்ன கூறுகின்றீர்கள் எனக்கேட்டுவிட்டு இந்தவிவகாரத்தில் உங்களுடன் மோதுவதற்கு நான் விரும்பவில்லை” என்று, கூறியமர்ந்தார்.
53 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
55 minute ago
2 hours ago