Freelancer / 2026 மே 07 , மு.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
"நீலகாமம் தோட்டச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் போலியான விடயங்களைச் சமூகமயப்படுத்த முயற்சிக்கின்றார்; மலையகத்தில் ஒரு மே தினக் கூட்டத்தைக் கூட நடத்த முடியாதவர்கள், மலையக மக்கள் பற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றவர்கள்" என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06) அன்று நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம்’ மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில்:
“நீலகாமம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. சபையில் சில விடயங்களை முன்வைத்தார். அரசாங்கத்தின் அனுசரணையுடன்தான் இந்தத் தாக்குதல் இடம்பெற்றது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு அவர் பேசுவது தெளிவாக விளங்குகின்றது.
ஆனால், மக்கள் உண்மையை அறிவார்கள். இச்சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த விடயத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.
கடந்த 1978ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பெருந்தோட்டப் பகுதிகளுக்குத் தீ வைத்தவர்களே இன்று மலையக மக்கள் பற்றிப் பேசுகிறார்கள். மலையகத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) எழுச்சி பெற்றுள்ளதை அவர்கள் நன்கறிவார்கள். அதனால்தான் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். மலையகத்தில் ஒரு மே தினக் கூட்டத்தைக் கூட நடத்தாதவர்கள், மலையக மக்கள் பற்றிப் பேசுவதற்குத் தகுதியற்றவர்களாகவே கருதப்படுவார்கள்,” என்றார்.
5 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago