Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூ.எல். மப்றூக்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி தொடர்பான சிக்கலை, இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் தீர்த்து, செயலாளர் அல்லது செயலாளர் நாயகம் என்கிற பதவிகளில் இரண்டில் ஒன்றை மாத்திரம் முறைப்படி நியமித்து, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேஷப்பிரிய, எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு, நவம்பர் மாதம் 16ஆம் திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பிரச்சினை தீர்க்கப்படும் வரையில், (15 ஆம் திகதி வரை) முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகிய இருவரின் பெயர்களையும், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிரலில், செயலாளர் பதவிக்குரியதாகக் காட்சிப்படுத்தாதிருப்பதற்கு, தாம் தீர்மானித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி தொடர்பான சிக்கலைத் தீர்த்துக் கொள்ளத் தவறும் பட்சத்தில், எதிர்வரும் தேர்தல்களின்போது, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதில் சிக்கல் நிலை உருவாகும் என்பதையும் ஆணைக்குழுவின் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் 07.11.2015 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட யாப்புத் திருத்தத்தின் மூலம், கட்சியில் செயலாளர் நாயகம் மற்றும் செயலாளர் என இரண்டு பதவிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
அவற்றில், தேர்தல் அலுவல்களின் போது, செயலாளர் பதவி ஏற்புடையதென அறிவிக்கப்பட்டது. மேலும், இதுவரை செயலாளர் நாயகம் பதவி வகித்த எம்.ரி. ஹசன் அலிக்குப் பதிலாக, ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர், செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி, அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலிலிருந்து தனது பெயர் நீக்கப்படுவது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி தொடர்பான சிக்கல் தீர்க்கப்படவில்லை.
இதேவேளை, தேர்தல் அலுவல்கள் தொடர்பான நியதிச் சட்ட நடவடிக்கைகளின் போது, நெருக்கடியான நிலைமைகள் தோன்ற முடியுமாகையால், அரசியல் கட்சியொன்று தொடர்பில் செயலாளர் பதவி ஒன்று மட்டும் செல்லுபடியாகும்.
மேலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், செயலாளர் பதவிகள் இரண்டு அல்லது செயலாளர் மற்றும் செயலாளர் நாயகம் என இரு பதவிகள் கிடையாது” உள்ளிட்ட விடயங்கள் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
48 minute ago
57 minute ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
2 hours ago
9 hours ago