2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை சி.ஐ.டி ஒழுங்காக விசாரித்தது: கோட்டா

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்காட் நிறுவனத்துக்கு உரித்தான மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) முழுமையான விசாரணை ஒன்றை நடத்தியதாகவும், இதில் எவ்விதமான சட்டமீறல் இல்லாதது மட்டுமல்லாமல் தனது செயல்முறையில் ஒரு தவறேனும் இல்லையென சி.ஐ.டி தீர்மானத்துக்கு வந்துள்ளதாகவும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.

இந்த நிறுவனத்தின் வேலை பற்றியும், மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை இலங்கை உருவாக்கியதன் சர்வதேச பின்புலம் பற்றியும் தெரியாதவர்கள் என் மீது பழி சுமத்தினர். நான் பழிவாங்கலை விரும்பாதபோதும் என்மீதான குற்றச்
சாட்டுக்களை முழுமையாக விசாரிக்க வேண்டும் என விரும்பினேன்' அதை சி.ஐ.டி.யினர் செய்தனர் என கோட்டபய இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகள் கேட்டுக்கொண்டபடி கடற்கொள்ளைக்கு எதிராக இந்நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. அவன்காட் பலரினது பாராட்டை பெற்றதுடன், இலங்கைக்கு அந்நிய செலாவணியையும் சம்பாதித்து கொடுத்தது.

மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பான விசாரணையை தொடரப்போவதில்லை என அரசாங்கம், கொழும்பு மேலதிக நீதவானுக்கு திங்கட்கிழமை அறிவித்தது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இந்த விசாரணையை நிறுத்தப்போவதாக சி.ஐ.டி.யினர் அறிவித்ததை தொடர்ந்து, நீதவான் நிஷாந்த பீரிஸ் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்றதன் பின்னர், மிதக்கும் ஆயுதக்களஞ்சியத்தையும். 3,000க்கு மேற்பட்ட தானியங்கி ஆயுதங்களையும் பொலிஸ் கைப்பற்றியது. இந்த ஆயுதக் களஞ்சியத்தை அவன்;காட் எனும் தலைமைப் பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வந்தது.

அவன்காட் நிறுவனம், பாதுகாப்பு அமைச்சுக்கு உரித்தான ரக்னாலங்கா லிமிட்டெட்டுடன் கூட்டுச் சேர்ந்திருந்தது. ரக்னா லங்கா நிறுவனம், கடற்கொள்ளையர் அதிகமாக காணப்பட்ட சோமாலியா மற்றும் வளைகுடா கடல் பகுதி கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .