2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மாத்தறையில் பெரிய முதலை சிக்கியது

Niroshini   / 2016 நவம்பர் 07 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை - வெல்கொட பிரசேத்தில் பெரிய முதலையொன்று வனவிலக்கு அதிகாரிகளால் இன்றுத் திங்கட்கிழமை பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 18 அடியுடைய இந்த முதலை, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதலைகளில் மிகப் பெரிய முதலை என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூன்று பாதங்களை கொண்டுள்ள இந்த முதலை, பிறப்பில் இருந்தே அவ்வாறான நிலைமையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததையடுத்தே கங்கையிலிருந்து இந்த முதலை கிராமத்துக்குள் பிரவேசித்துள்ளது.

மாத்தறை பொலிஸ் அதிகாரிகள், மிரஸ்ஸ வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கலமெடிய வனவிலங்கு அதிகாரிகள் அதிகாரிகளின் உதவியுடன் இந்த முதலை நில்வளா கங்கையில் விடுவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .