Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 08 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னுடைய காதலன், சுமார் இரண்டு மாதகாலமாக தன்னுடன் கதைக்காமல் விட்டமையால், காதலியான மாணவியொருவர், பாடசாலைச் சீருடையிலேயே கடலில் குதித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
எனினும், அந்நேரத்தில் கடற்கரையோரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார், அம்மாணவியைக் காப்பாற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம், காலி, திக்வெல்லப் பகுதியிலுள்ள கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) காலை 7.45க்கு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மாணவியொருவர், சீருடையுடன் கடலில் குதிப்பதை அப்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கண்டுள்ளனர். விரைந்து செயற்பட்ட பொலிஸார், தாமும் கடலில் குதித்துத் தேடியுள்ளனர். எனினும், அம்மாணவி அலைகளில் சிக்குண்டு சுமார் 100 மீற்றர் தூரத்துக்கு இழுத்துச்செல்லப்பட்டுள்ளார்.
கடல் நீரை அதிகமாய் பருகியிருந்தமையால், அவர் மூச்செடுப்பதற்கு சிரமப்பட்டுள்ளார். அம்மாணவியைக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
தான், அலைபேசியின் ஊடக அறிமுகப்படுத்திக்கொண்ட இராணுவ வீரரொருவருடன் காதல் வயப்பட்டதாகவும், தன்னுடைய காதலான அவர், கடந்த இரண்டு மாதங்களாக தன்னுடன் தொடர்பினை ஏற்படுத்தாமையால், மனமுடைந்து இவ்வாறான முடிவை எடுத்ததாகவும் வாக்குமூலமளித்துள்ளார்.
மாணவி வழங்கி வாக்குமூலத்தின் அடிப்படையில், திக்வெலப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .