Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா கூட்டுறவு விற்பனை சங்கத்தில் (மார்க்பெட் )நிறுவனத்தில் பொருட்களைப் பெற்றுக்கொண்டு அதற்கான கட்டணமான 93 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவின் மூத்த மகனை எதிர்வரும் 14ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர், இந்த நிறுவனத்தில் பொருட்ககை; கொள்வனவு செய்துவிட்டு அதற்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக அந்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 11ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் பிரகாரம் இது குற்றமாகும் என்பதுடன் சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் அவருக்கு பிணை வழங்க வேண்டாம் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித்
திஸாநாயக்க நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார். இதனையடுத்தே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
17 May 2025