2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

முன்னாள் உறுப்பினருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 25 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவரான ஆர்.எம். ரணவீர, எதிர்வரும் 03ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மொனராகலை நீதவானே மேற்கண்டவாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற  உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ஒருவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் அவரை, பொலிஸார் நேற்றுக் காலை கைதுசெய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மேற்படி நபர், கடந்த 10 மாதங்களாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தநிலையில், அவர், பொலிஸில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆஜராகியபோதே இவரை கைது செய்ததாக பொலிஸார் அறிவித்திருந்தனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X