2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் பிரதியமைச்சருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுளை நீதவான் தினேஷ் லக்மால் பெரேரா, இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கஹாவத்தை பிரதேசத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களின் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயரிழந்துள்ளதுடன் சிலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .