2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

முன்னேஸ்வரம் பலிபூஜை இவ்வருடமும் இல்லை

Thipaan   / 2016 செப்டெம்பர் 15 , பி.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடந்தோரும் நடத்தப்படும் மிருகபலி பூஜையை, இவ்வருடமும் நடத்தப்போவதில்லை என்று, முன்னேஸ்வரம் பத்ரகாளி கோயில் நிர்வாகம் தீர்மானித்துள்ளார்.

சிலாபம், முன்னேஸ்வரம் சிவன் கோயிலின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா, நேற்று வியாழக்கிழமை (15) நடைபெற்றது. இதன், தீர்த்தோற்சவம், இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

சிவன் கோயில் மகோற்சவத்தோடு இணைந்ததாக, பத்ரகாளியம்மன் கோயிலின் மகோற்சவமும் நடைபெற்று வருகின்றது. இதன் தேர்த் திருவிழா, நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

பத்ரகாளியம்மன் கோயிலின் வருடாந்த மகோற்சவம் நடைபெறுகின்ற போதிலும், காலாகாலமாக அக்கோயிலில் நடத்தப்பட்டு வந்த மிருகபலிப் பூஜையை, இம்முறை நடத்தப்போவதில்லை என்று கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .