2025 நவம்பர் 26, புதன்கிழமை

யுனானி மருத்துவ குறைபாடுகளை தீர்க்க வலியுறுத்தல்

Editorial   / 2025 நவம்பர் 26 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலைத்தேய மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத பல நோய்களை சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் குணப்படுத்த முடியும் என தெரிவித்துள்ள இலங்கையின் சித்த யுனானி ஆயுர்வேத மருத்துவர்கள்,  யுனானி மருத்துவ துறையில் காணப்படும் குறைபாடுகளை தீர்க்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

  இலங்கையின் சித்த யுனானி ஆயுர்வேத மருத்துவர்கள்.  25 மாவட்டங்களில்  சுதேச மருத்துவத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பாக ஆயுர்வேத ஆணையாளர் ஜெனரல் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரை செவ்வாய்க்கிழமை (25) அன்று அவர்களுடைய அலுவலகத்தில்  சந்தித்த பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பெண் சுதேச மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரிடம் கலந்துரையாடியதுடன்  ஆயுர்வேத ஆணையர் அவர்களிடம் சுதேச வைத்திய சாலைகளில் குறைந்தளவு மருத்துவர்களே சேவையை வழங்குகின்றார்கள் 23.3 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் சொற்பளவு மருத்துவர்கள் தான் சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எமது குறைபாடு எமது  சேவையை மட்டுப்படுத்துதல் தான் என தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

கடந்த காலங்களில் வைத்தியப் பற்றாக் குறையின் காரணமாக சில வைத்தியசாலைகள் தமது சேவையினை மட்டுப்படுத்தியிருந்தமை, சிகிச்சைகள், மருந்துகள் மட்டுப்படுத்தப்பட்டமை ஆணையாளருக்கு எடுத்துக் காட்டப்பட்டது.

 பொதுமக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சார் பிரச்சனைகளையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணமாக மூன்று பஸ் மாறி ; 40 மைல் தூரம் பிரயாணம் செய்து 65 வயது உள்ள ஒருவரால் வைத்தியம் பார்க்க வருவதில் பல இடர்பாடுகள் இருத்தல் போன்ற யதார்த்தமான விடயங்களை ஆணையாளருக்கு தெரிவித்திருந்தோம். ஆணையாளரும் இவ்விடயத்தை  ஏற்றுக் கொண்டிருந்தார்.

தீர்வாக இலங்கையின் சனத்தொகை கேற்ப உட்சேர்த்தல் அதாவது , ஐந்தாயிரம் பொது மக்களுக்கு ஒரு வைத்தியரையும் பத்தாயிரம் பொது மக்களுக்கு ஒரு C.M.O வைத்தியரையும் நியமிக்க வேண்டும்.

2,587 ஆக அங்கீகரிக்கப்பட்ட ஆளணி  இருக்கும் வரையில் எம் மருத்துவம் மாற்றம் காணாது. இத்தொகை 7000 ஆக உயர்த்தப்பட்ட சரியான முகாமைத்துவ திட்டம் பிரயோகிக்கப்பட்டால் மட்டுமே பொது மக்களுக்கு சரியான சேவையினை வழங்கலாம் என கூறியதுடன் அக்டோபர் 9ம் திகதி சுகாதார அமைச்சின் செயலாளர் "புதிய ஆளனிகளை உருவாக்குதல்  தற்போது சாத்தியமில்லை" என குறிப்பிட்ட அதற்கிணங்க தற்போது பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் உட்பட  அரச வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் சித்த ஆயுர்வேத யுனானி மருத்துவர்களுக்கு எதிர்கால மற்ற தன்மையை உருவாக்கும்

வலுவான கொள்கை ஒன்றை வகுக்கப்பட்டு சரியான தீர்வு எட்டப்படாதவரை  5 பீட மாணவர் தொகையை குறைத்து உள்ளீர்க்க கோரியிருந்தோம்

2024/07/29ம் திகதி அன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து மாணவர் தொகையை குறைத்து உள்வாங்க கோரிய போது நம் நாட்டுக்கு ஆயுர்வேத மருத்துவ தேவை மிக மிக அதிகமாக உள்ளது. ஆயுர்வேத திணைக்களத்திடம் சரியான திட்டமிடல் இல்லை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்னென்ன விடயங்களை அபிவிருத்தி செய்ய  எண்ணுகிறதோ அதை அவர்களுடனேயே கலந்துரையாடி சிக்கல்கள் ஏதும் இருப்பின் அதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தெளிவாக எடுத்துக் கூற  கேட்டிருந்தோம்

வெற்றிடமாக உள்ள ஆளணிகளை நிரப்புதல் சாதனை புரிய வழிவகுக்காது என்பதை ஆணையாளருக்கு வலியுறுத்தியதுடன,  அரச சேவையிலுள்ள ஒரு வைத்தியரின் நுட்பம் கனிஷ்ட வைத்தியருக்குக் கடத்தப்பட வேண்டுமெனில் முறையான முகாமைத்துவ திட்டம் அவசியமென குறிப்பிட்டிருந்தோம்.

பல சுதேச அரச வைத்தியசாலைகளில் சாதனையான சிகிச்சைகளை வழங்கப்படுகின்றது.

நாம் வைத்தியசாலையுடன் நேரடியாக தொடர்பில் இல்லை. இதனால், வைத்தியர்களின்  திறமைகள் குறித்த வைத்தியருடன் மாத்திரமே மட்டுப்படுத்தப்படும். பல வருடங்களுக்கு பின்னர் நியமனம் பெறும் போது உண்மையான திறமை மறைக்கப்பட்டுவிடும். இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என குறிப்பிட்டிருந்தோம்.

முதியோர் சேவை, தொற்றா நோய், CP, Autism போன்ற நிலமைகளில் பல வெற்றிகளை சுதேச மருத்துவத் துறை பெற்றுள்ளது.

அவற்றை தேசிய கொள்கைகளாக பிரகடனப்படுத்துவது மக்களுக்கு நன்மை பயக்கும் என குறிப்பிட்டிருந்தோம்.

இலங்கையின் இறப்பு வீதத்தில் 78.4% தொற்றா நோய்களால் ஏற்படுகிறது. எமது மருத்துவ முறைமையை மேம்படுத்துவதன் மூலம் இவ் 74.8 %  இறப்பு வீதத்தினை குறைக்கலாம் என குறிப்பிட்டிருந்தோம்.

இலங்கையின் படைவீரர்களுக்கு, குறிப்பாக Police, Army, Navy போன்ற வீரர்களுக்கு தொற்றா நோய்கள் ஏற்படும் வீதம் 30 - 40% வரையாக இருப்பதாக நாங்கள் அறிய பெற்றிருந்தோம். எனவே அப்படியான நோய் நிலைமைகளை குறைக்க எமது மருத்துவம் பெரும் பங்கு வகிக்கிறது.

மலைநாட்டில் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ சேவைகள் ஏனைய இடங்களை போல் வழங்கப்படுவதில்லை. ஆகவே மலைநாட்டு மக்களுக்கு சேவை பெறுதலை உறுதிப்படுத்தி விஸ்தரிக்க வேண்டும், சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவம் பெரும் பங்கு வகிக்கும்.

இவ் மருத்துவ முறைகளை முறை வர பயன்படுத்துவதன் மூலம் இலங்கையில் டொலர் செலவினங்களை குறைக்கலாம்.

தற்போது சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. ஆகவே மதவாச்சி சிறுநீரக ஆயுர்வேத வைத்திய சாலையை விரிவாக்கம் செய்யலாம்.

இம் மருத்துவ முறை போல இருதய நோய்களில் கூட பல சாதனையான சிகிச்சைகள் இடம்பெறுகின்றன. ஆகவே இது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

48 திட்டங்களை உள்ளடக்கிய திட்ட முன்மொழிவுகளை முதற்கட்டமாக வழங்கியதுடன் முதற்கட்டமாக நாங்கள் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தினால் தற்போது எம் சமூகத்திலுள்ள பல நோய் நிலைமைகளுக்கு தீர்வு காணலாம்.

இவ்வாறு தீர்வு காண்பதன் மூலம் எதிர்காலத்தில் வேலை இல்லை என்கிற பிரச்சனை வராது என குறிப்பிடுவதுடன் 2035ம் ஆண்டளவில் இலங்கையின் சுதேச மருத்துவத்தை  உலகின்  சிறந்த இடத்துக்கு கொண்டு வர முடியும். அதற்குத் தேவையான பூரண ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றோம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X