2026 ஜனவரி 14, புதன்கிழமை

யாழ்ப்பாணம் தாவடியில் பதற்றம்

Editorial   / 2026 ஜனவரி 14 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.

 கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும் கட்சி அலுவலகமும் அமைந்துள்ள கட்டடத்தின் மீதே இந்தத் தாக்குதல் நள்ளிரவு 12.50 மணியளவில், நடத்தப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் வாயில் பகுதியில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றித் தீ வைத்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் காரணமாகக் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .