2026 மே 11, திங்கட்கிழமை

dd

யாழ். தேவியின் பயணம் மீண்டும் ஆரம்பம்

Janu   / 2026 மே 10 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான யாழ் தேவி (Yal Devi) ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பயண விபரங்கள்: இலங்கை புகையிரத சேவையின் அறிவிப்பின்படி, யாழ் தேவி புகையிரதத்தின் பயண நாட்கள் மற்றும் ஒழுங்குகள் வருமாறு:

  • கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம்/காங்கேசன்துறை நோக்கி: திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பயணிக்கும்.
  • யாழ்ப்பாணம்/காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி: செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிக்கும்.

வடக்கு ரயில் பாதையில் மேற்கொள்ளப்பட்ட நவீனமயமாக்கல் பணிகளைத் தொடர்ந்து, இந்தச் சேவை மீண்டும் அமுலுக்கு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .