2026 மே 02, சனிக்கிழமை

யாழில் பிரதமர்

Editorial   / 2019 செப்டெம்பர் 07 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாண மாநகர நகர மண்டபத்துக்கான  நிரந்தரக் கட்டடத்துக்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டி வைத்தார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரதமர் யாழ். மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே குறித்த அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

2,350 மில்லியன் ரூபாய் செலவில் மாநகர மண்டபம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமனற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .