2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ். தனியார் விடுதிகளில் பண மோசடி

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 07 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப் , வைபர், பேஸ்புக் மற்றும் இணைய தளங்கள் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளில் பெண்களுடன் உல்லாசமாக இருக்க முடியும் எனவும் , அதற்கான 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையில் செலவாகும்.

என சில பெண்களின் புகைப்படங்களில் ,அவர்களின் முகங்கள் மறைக்கப்பட்ட புகைப் படங்களை விளம்பரமாக பிரசுரிக்கின்றனர்.  அவற்றை நம்பி சில அந்த விளம்பரங்களில் உள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை கேட்கும் போது, குறித்த தனியார் விடுதியில் பெண் உள்ளதாக கூறி பணத்தை வைப்பில் விடுமாறு கூறி பணத்தை பெற்றுக் கொள்கின்றனர். 

பணத்தினை வழங்கியவர்கள் அந்த விடுதிகளில் சென்ற பின்னரே தாம் ஏமாற்றப்பட்ட விடயம் அறிந்து அந்த தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்படுகிறது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்ய தயங்குவதால் , தொடர்ந்து குறித்த கும்பல் பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதேவேளை குறித்த கும்பல்கள் சமூக வலைத்தளங்களில் யாழில் உள்ள பிரபல தனியார் தங்குமிட விடுதிகளின் பெயர்களை பாவித்து மோசடிகளில் ஈடுபடுவதனால் , குறித்த தங்குமிடங்களில் நற்பெயர்களுக்கு களங்கம் ஏற்படுவதாக அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே பொலிஸார் இவ்வாறான சமூக வலைத்தளங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி குறித்த கும்பல்களை சேர்ந்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X