Editorial / 2026 மார்ச் 06 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துயரார்ந்த படகு விபத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறியும் வகையில், கடற்படையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார்.
விபத்துக்குள்ளான படகு கடற் பயணத்திற்குத் தகுதியான நிலையில் இருந்ததா? பயணிகளின் எண்ணிக்கை வரம்பைத் தாண்டியதா? மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டனவா? என்பது குறித்து ஆராய்ந்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடலில் காணாமல் போயிருக்கக் கூடியவர்களைத் தேடும் பணிகளைத் துரிதப்படுத்துமாறும், இதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் எவ்வித தாமதமுமின்றி பயன்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
விபத்து தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசரக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள அமைச்சர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் முன்னின்று வழங்கும் என உறுதியளித்தார்.
மேலும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உடல்நிலை குறித்து அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கேட்டறிந்த அவர், அவர்களுக்குச் சிறந்த சிகிச்சைகளை வழங்குவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago