2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

யோஷித மற்றும் டெய்ஸி ஆச்சிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Freelancer   / 2025 ஜூலை 11 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டி டெய்ஸி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இந்த மாதம் 28ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி தற்போது விடுமுறையில் இருப்பதால், வழக்கை மீண்டும் 28ஆம் திகதி அழைக்கப்படுமாறு  கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சுமார் 73 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாக குற்றஞ்சாட்டி, சட்டமா அதிபரால் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்ஸி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .