Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 20 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களை புரிந்தோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இந்திய அரசாங்கம், இலங்கை மீது தனது செல்வாக்கைப் பிரயோகிக்க வேண்டும் என தமிழ் நாட்டு ஆளுநர் கே.ரோஸய்யா, தமிழ் நாட்டுசட்ட சபையில் கூறினார்.
ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்தால் புரியப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டுமென தமிழ்நாட்டு சட்ட சபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அவர் நினைவு கூறினார்.
தமிழ்க் குடும்பங்களை அவரவர் சொந்த காணிகளில் குடியேற்ற வேண்டுமென இலங்கையிடம் வற்புறுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை கடற்பரப்பில், தமிழ்நாட்டு மீனவர்களை தாக்குவதையும் படகுகள், வலைகளை பறிமுதல் செய்வதையும் அவர் கண்டித்தார். கச்சதீவை மீளவும் பெறுதல், எமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீள நிலைநிறுத்தல் என்பன மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது எமது கடமையாகும் எனவும் அவர் கூறினார்.
தி.மு.கவின் சட்ட சபை தலைவரான மு.கா.ஸ்டாலின், இந்தப் பிரச்சினை தொடர்பாக நீதி விசாரணை ஒன்றை தனது கட்சி கோரியபோதும், மாநில அரசாங்கம் எதுவும் செய்யவில்லை எனவும் அவர் கூறினார். இவ்விடயம் குறித்து ஆளுநரின் உரையில் கூட எதுவும் கூறப்படவில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.
7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago