2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யானையின் வயிறுக்கு கீழே நுழைய முயற்சி: 10 மாத சிசு மரணம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 மாத சிசுவை தூக்கிக்கொண்டு யானையில் வயிற்றுக்கு கீழே நுழைய முயன்ற போது , யானை தவறுதலாக மிதித்தமையால் அச்சிசு பரிதாபமாக மரணமடைந்ததுடன் அந்த சிசுவை தூக்கிச்சென்றவர் படுகாயமடைந்து,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கொக்கரெல்லையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொக்கரெல்ல, மாதகம்பொல விஹாரையின் பெரஹெரவுக்காக யானையொன்று சனிக்கிழமை அழைத்துவரப்பட்டுள்ளது.

அந்த யானையின் வயிற்றுக்கு கீழே சென்று பலரும் தங்களுடைய நேர்த்தி கடனை நிறைவேற்றிக்கொண்டுள்ளனர். 10 மாத சிசுவை தூக்கிகொண்டு ஒருவர், யானையின் வயிற்றுக்கு கீழே செல்வதற்கு முயன்றுள்ளார்.

இதன்போது அவர் காலிடறி கீழே விழுந்துவிட்டார். அதிர்ச்சிக்குள்ளான அந்த யானை இருவரையும் மிதித்துவிட்டது.

இதில், இருவரும் காயமடைந்தனர். காயமடைந்த அந்த சிசு கொக்கரெல்ல வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளது.

சிசுவை தூக்கிச்சென்றவர் 44 வயதானவர் என்றும் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற போது சிசுவின் தாய் அவ்விடத்தில் இருந்துள்ளார். இந்த சிசுவை குழும்ப உறவினரே தூக்கி சென்றுள்ளார் என்று ஆரம்பக்கட்டவிசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.

பெரஹராவுக்கு வந்திருந்த யானை கர்ப்பம் தரிந்திருந்ததாகவும் தெரியவருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X