Editorial / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுகள் தமிழகத்தில் நெடுங்காலமாக இருந்துவந்த நிலையில், அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை சில தினங்களுக்கு முன்பு வெளிப்படுத்தினார்.
இச்சூழலில் ரஜினிகாந்த் இல்லம் முன்பாக அதி நவீன சிசிடிவி கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரஜினிகாந்த், வரும் ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ளார். இந்நிலையில், தனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவரது இல்லம் அமைந்துள்ள போயஸ் தோட்டம் அருகே அதிநவீன சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வீட்டின் முன்பு உள்ள பகுதி, அவரது இல்லத்திற்குத் திரும்பும் பகுதி ஆகிய இடங்களில் சிசிடிவி கமெராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரசிகர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் அவரது இல்லம் வரும்போது வீட்டின் உள்ளே இருந்தே பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுள்ளது.
இதில் பதிவாகும் காட்சிகள் பல மாதங்கள் வரை இருக்கும் வகையிலான அதிநவீன சிசிடிவி கமெராவாக அவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago