Editorial / 2021 ஏப்ரல் 07 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், அப்பதவியை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.
விருப்பு வாக்குப் பட்டியலில் அவருக்கு அடுத்தப்படியாக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெருமவே இருக்கின்றார்.
ஆகையால், ரஞ்சனின் வெற்றிடத்துக்கு அஜித் மன்னப்பெருமவே நியமிக்கப்படுவார் என தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago