2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ரஞ்சனின் குரல்பதிவு தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்

Editorial   / 2020 பெப்ரவரி 12 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (12) இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்போது , ரஞ்சன் ராமநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குரல் பதிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள குரல் பதிவுகளில் தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இதனிடையே, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளுக்கான ஒழுங்குப்பத்திரத்தை தயாரிப்பது தொடர்பில், இன்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன், நாடாளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .