Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 14 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதிவெல பகுதியில் அமைந்துள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிற்கு நபர் ஒருவர் நேற்று (13) வருகைத்தந்துள்ளார். எனினும் பாதுகாப்பு பிரிவினர் குறித்த நபரை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை
குறித்த நபரிடம் ஊரடங்கு அனுமதி பத்திரம் எதுவும் இருக்கவில்லை என்பதை அங்கு கடமையில் இருந்த அதிகாரி அவதானித்துள்ளார்.
இது தொடர்பில் குறித்த நபரிடம் பொலிஸார் பேசிக் கொண்டிருந்த போது, ரஞ்சன் ராமநாயக்க வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் பொலிஸரை கடுமையாக திட்டிய ரஞ்சன் குறித்த நபரை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார்.
இதனால் பொலிஸாரின் கடமைக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பில் மிரிஹான பொலிஸாரால் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago