Editorial / 2026 மார்ச் 22 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில், வொல்வர்ஹாம்டன் (University of Wolverhampton) பல்கலைக்கழகம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தியோகபூர்வ விளக்கமளித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்தப் பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்கவிற்குத் தாம் அழைப்பு விடுத்ததாகப் பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த விழாவிலேயே அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்கவிற்கு கௌரவப் பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டது.
வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் ஒரு அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனம் என்றும், அது அரச நிதியுதவி பெறும் கல்வி நிறுவனம் என்றும் அதன் துணைவேந்தர் சி.ஐ.டி பணிப்பாளருக்குத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது மேற்கொண்ட இந்த விஜயம் ஒரு 'தனிப்பட்ட விஜயம்' என சி.ஐ.டி வாதாடுகிறது. இதற்காக 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக, பரஸ்பர சட்ட உதவி (MLA) கட்டமைப்பின் கீழ் இந்தத் தகவல்களைப் பெற சட்டமா அதிபர் திணைக்களம் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், சி.ஐ.டி நேரடியாக மின்னஞ்சல் மூலம் பல்கலைக்கழகத்தைத் தொடர்புகொண்டு பதிலைப் பெற்றுள்ளது. இது குறித்து மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இதற்கிடையில், சிங்கப்பூரில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரணில் விக்ரமசிங்க தற்போது அங்கு ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் தீவிர ஓய்வில் இருப்பதாகவும், குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்றவர்கள் அவரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
5 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
48 minute ago
1 hours ago