2026 மே 18, திங்கட்கிழமை

dd

ரணவிரு நினைவு தின ஒத்திகைக்கு விமல் குழு இடையூறு

Editorial   / 2026 மே 18 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

  தேசிய ரணவிரு நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் தலைமையில் பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் உள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் விசேட நினைவேந்தல் நிகழ்வொன்று இன்று (19)  செவ்வாய்க்கிழமை டைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கான ஒத்திகை நடவடிக்கைகள் திங்கட்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டன. குறித்த ஒத்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை (19)  அன்று நடைபெறவுள்ள பிரதான நிகழ்வுக்கான ஏனைய ஏற்பாட்டுப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சுமார் 35 பேர் கொண்ட குழுவினர், ஒத்திகை நடவடிக்கைகளுக்கும் அதிகாரிகளின் கடமைக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி ரணவிரு நினைவுத் தூபி வளாகத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.

இதன்போது, அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகளால் குறித்த முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், அந்த இடத்தில் குழுமியிருந்த நபர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X