Editorial / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் எட்டுபேர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து, செவ்வாய்க்கிழமை (26) வெளியேறியதாக கூறப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் சரீரப்பிணை வழங்கிய பின்னர் அவர்கள் வெளியேறியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, கொழும்பு கோட்டை நீதவான் திருமதி நுலுபுலி லங்காபுர தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப்பிணைகளில் விடுவித்தார்.
விளக்கமறியல் உத்தரவுக்குப் பின்னர், வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, இன்னும் அங்கேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
30 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago