Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு கட்சிகளுக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டத்தை சஜித் பிரேமதாச இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பரிந்துரைக்கப்பட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்பது தொடர்பில் கேட்டபோது சம்பந்தன் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்களின் பிரச்சினைகளை முன்னதாக அடையாளம் கண்டிருந்தமையால், அவர் வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டால் அதனை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனரத்ன, மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
-சன்டே டைம்ஸ்
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago