Editorial / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது தமது ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவது கட்சி என்ற ரீதியில் அவர்களுக்கு உள்ள உரிமை என, கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசியல் நெருக்கடி காணப்படும் போது, அரசியல் தலைவர்கள் இவ்வாறான ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த விடயம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் பாதிப்பு ஏற்படுத்தாது என்றம் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினரை தவிர ஏனைய எந்தவொரு கட்சிகளுடனும் திறந்த பேச்சுவார்த்தைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026