Editorial / 2019 ஜூலை 11 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில்வே திணைக்களத்தில் பல்வேறு பிரிவுகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 1500 வரையான தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்த சேவையில் இணைக்காமல், புதிதாக ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அவ்வாறு நடைபெற்றால் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தொழிற்சங்கங்கள் இன்று அறிவித்துள்ளன.
புதிதாக ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றமையானது, ஐந்து வருடங்களுக்கு அதிகமாக தற்காலிக ஊழியர்களாக கடமையில் ஈடுபட்டுள்ள 1500 பேர் வரையானவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் செயற்பாடு என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிரந்தர சேவையில் ஊழியர்கள் இணைக்கப்படவேண்டிய நிலை காணப்படும்போது அரசியல் காரணங்களின் அடிப்படையில் புதிய நியமனங்கள் வழங்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் அந்த தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago