Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 12 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா - மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில், 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேற்று இரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோதே, சரக்கு ரெயில் மீது மோதி குறித்த ரயில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இரண்டு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கவனக்குறைவே ரயில் விபத்துக்கு காரணம் என ரயில்வே இருப்புப்பாதை பொலிஸா நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே இருப்புப்பாதை பொலிஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதால் மட்டுமே ரயிலை இயக்கியதாக, பாக்மதி விரைவு ரயிலை ஓட்டிய லோகோ பைலட் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார். (AN)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
46 minute ago
3 hours ago