2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ரயில் நிலையங்களுக்கு புதிய உறுப்பினர்கள்

Princiya Dixci   / 2015 நவம்பர் 17 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் நிலையங்களில் கடமையாற்றுவதற்கு 61 புதிய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள், நேற்று திங்கட்கிழமை (16) வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

ரயில் ஓட்டுநர்கள் 31 பேர் மற்றும் ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் 30 பேர் ஆகியோருக்கான நியமனக் கடிதங்களே வழங்கப்பட்டுள்ளன. 

அத்துடன், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு நான்கு வருடங்கள் பயிற்சி கொடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, ரயில் ஓட்டுநர்கள் 120 பேர் பற்றாக்குறையாகவுள்ளதாக அவ்வமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X