Editorial / 2017 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டத்தின் பிரகாரம், இன்னும் நிரபராதியாகவே இருக்கும் ரவி கருணாநாயக்க, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்ய எடுத்த தைரியமான முடிவை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வரவேற்றார்.
ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்தில் நேற்று (10) உரையாற்றியதன் பின்னர் எழுந்த அவர், “தகுதிவாய்ந்த நீதிமன்றமொன்றால், நபரொருவர், குற்றவாளியாக இனங்காணப்படும் வரை, அந்த நபர் நிரபராதியாக அங்கிகரிக்கப்பட வேண்டியது அவரது அடிப்படை உரிமையாகும்.
“அந்த வகையில், அமைச்சர் ரவி கருணாநாயக்க, தகுதி வாய்ந்த நீதிமன்றமொன்றால் இன்னும் குற்றவாளியாக
இனங்காணப்படவில்லை. அவ்வாறானவர், நிரபராதியாக இருப்பது அந்த நபரின் அடிப்படை உரிமையாகும்” என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
“எது எவ்வாறாக இருப்பினும், ரவி கருணாநாயக்க, ஏனைய உறுப்பினர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்” அதனைப் பாராட்டுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
“நல்லாட்சியினதும் மக்களினதும், நாட்டினதும் நலனுக்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இது ஏனைய பலரும் பின்பற்ற வேண்டிய சிறந்த முன்னுதாரணமாகும். கடந்த காலங்களில் அரச பதவிகளை வகித்த பலர் மீதும் அரசாங்க மாற்றத்தின் பின்னர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான யாரும் இவ்வாறு செயற்பட்டிருக்கவில்லை” என்றார்.
இதனையடுத்து எழுந்த ரவி கருணாநாயக்க, சம்பந்தனின் இந்த உரைக்கு, தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
48 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
50 minute ago
2 hours ago