2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி

Freelancer   / 2026 மார்ச் 06 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவிடமிருந்து எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு இந்தியாவிற்கு 30 நாட்கள் சலுகை காலத்தை அமெரிக்கா  வழங்கியுள்ளது. 

அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அனுமதியில், 

2026 மார்ச் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ரஷ்ய கூட்டமைப்பிற்கு சொந்தமான மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை இந்தியாவிற்குள் விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, தொடர்புடைய வர்த்தக நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20% கையாளும் கடல்சார் சோதனைச்சாவடியான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முற்றுகையிட்டுள்ளதாலும், வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய எண்ணெய் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களாலும் மத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய் உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சூழலில், அமெரிக்காவின் இந்தச் சலுகை இந்தியாவின் முக்கியமான எரிசக்தி விநியோக வழிமுறைக்கு ஒரு தற்காலிக உந்துதலாக அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .